
நேற்றைய கேப்டனின் திரையுலக வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சி …
தனது கை மூட்டு விலகி தனக்குள்ளே அந்த கஷ்டத்தை வைத்துக்கொண்டு போராடி நடித்த தூரத்து இடி முழக்கம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது படத்தை சரியாக எந்த மக்களும் பார்க்கவில்லை வியாபார ரீதியாக படம் தோல்வியை தழுவியது “”என்னடா இது மிகவும் கஷ்டப்பட்டு நடித்த படமும் ஓடாமல் போய்விட்டதே “” என்று மிகவும் வருத்தத்தில் இருந்தார் கேப்டன்
பத்திரிகைகள் அந்தப் படத்தை பாராட்டி எழுதினாலும் கேப்டன் விஜயகாந்தை பற்றி மட்டும் எழுதவே இல்லை குமுதம் பத்திரிக்கை மட்டும் கேப்டனை “”அந்தக் கருப்பும் அந்த சிரிப்பும் அருவருப்பை ஏற்படுத்துகிறது “”என்று எழுதியிருந்தது அந்த நேரத்தில் கேப்டன் விஜயகாந்த்திற்கு ஒரே ஒரு ஆறுதல்
தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மத்திய அரசின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது என்ற நல்ல தகவல் மட்டுமே ! அந்த தகவல் கேப்டனுக்கு உற்சாகத்தை தந்தது தொடர்ந்து பல கம்பெனிகளில் வாய்ப்புக்காக ஏறி இறங்கினார் எல்லோரும் விஜயகாந்த் பெயரை கிண்டல் செய்தார்கள் அதுதான் ரஜினிகாந்த் என்று ஒருவர் இருக்கிறாரே நீ என்ன செய்து விடப் போகிறாய் என்று !
தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் தனது உடைமையாக கொண்டு வாய்ப்புக்காக அலைந்து திரிந்து விட்டு சோகத்துடன் (இன்று பாண்டி பஜார் ரோகினி ஹோட்டல் அருகில் இருக்கும் கண்ணதாசன் சிலை )அன்று இல்லை அந்த இடத்தில் கேப்டன் நின்று கொண்டு ஒரு சினிமாக்காரரிடம் பேசிக் கொண்டிருப்பதை காரில் சென்று கொண்டிருந்த எஸ்ஏ சந்திரசேகர் பார்த்தார் அப்போதுதான் புதிதாக படம் இயக்க கதாநாயகனை தேடிக்கொண்டிருந்தார் கேப்டன் விஜயகாந்தைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்னார் யார் இந்த பையன் நன்றாக இருக்கிறானே அவனது கண்களில் ஒரு காந்தம் இருக்கிறது பார்க்க அம்சமாய் இருக்கிறானே என்று விசாரிக்க
அவர்தான் தூரத்து இடி முழக்கம் திரைப்படத்தின் கதாநாயகன் விஜயகாந்த் என்று சொன்னதும் காரை விட்டு இறங்கிய எஸ் ஏ சந்திரசேகர்
கேப்டன் விஜயகாந்திடம் சென்று நீங்கள் என் படத்தில் நடிக்கிறீர்கள் நாளை அலுவலகம் வாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார் அந்த வார்த்தைதான் கேப்டனுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை அளித்தது
ஆம் சட்டம் ஒரு இருட்டறை என்ற படம்தான் கேப்டனுக்கு திரையுலக புகழ் வெளிச்சத்தையும் பெற்றுத் தந்தது
சட்டம் ஒரு இருட்டறை படத்தில் கேப்டனுக்கு ஜோடியாக அன்றைய நடிகைகள் எவரும் நடிக்க முன்வரவில்லை தூரத்து இடிமுழக்கம் கதாநாயகி பூர்ணிமாவையே ஜோடியாக நடிக்க வைத்து படப்பிடிப்பை நடத்தி படத்தை வெளியிட்டார்கள். படம் சூப்பர் ஹிட்டாகஓடியது வெள்ளி விழா கொண்டாடியது
சட்டம் ஒரு இருட்டறை 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெளியாகி வெற்றி படமாக உலா வந்தது இது தெலுங்கு கன்னடம், இந்தி, என்று மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது தமிழிலேயே மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது
சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைக்க முக்கிய காரணமாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் சொல்லிக் கொண்ட உண்மை என்னவென்றால் இக்கதையை அன்று முன்னனி நடிகராக இருந்த ரஜினிகாந்த் அவர்களை மையப்படுத்தி தான் கதையை அமைத்திருக்கிறார் அவரிடம் கதை சொல்ல சென்ற பொழுது அவரை சந்திக்கவே முடியவில்லை பார்க்கவே முடியவில்லை (புதிய இயக்குனர் புதிய கம்பெனியில் நடிப்பதாகவும் அப்போது ரஜினிகாந்த் விரும்பவில்லை அப்போது மட்டும் அல்ல எப்போதுமே அவர் அப்படித்தான்) இந்த சம்பவம் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மனதை வருத்தியது ரஜினிக்காக கதை செய்தோமே இப்போது அதில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டு காரில் வரும் பொழுது தான் அவர் அந்த இடத்தில் கேப்டன் விஜயகாந்தை பார்த்து இருக்கிறார் கிட்டத்தட்ட உருவ சாயலில் அப்போது ரஜினிகாந்த்தை போன்று தான் விஜயகாந்த் இருந்தார் அதுதான் உண்மை
அதனால் இதை லாவமாக பயன்படுத்திக் கொண்டார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டறை தமிழில் வெற்றி பெற்றதை அறிந்த ரஜினிகாந்த் அந்த படத்தை பார்த்து ரசித்தார் இந்த படத்தில் நான் நடிக்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினார்
தமிழில் தான் நல்ல கதையை தவறவிட்டோமே என்று ரஜினிகாந்த் வருந்தி இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட சட்டம் ஒரு இருட்டறை இந்தி ரீமேக்கான அந்தா காணூன் என்ற படத்தில் நடித்து தன் ஆசையை தீர்த்துக் கொண்டார்
சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்திற்கு பின்பு கேப்டன் விஜயகாந்த் நடித்த திரைப்படங்களின் விபரங்களை நாளை பார்க்கலாம்…
தொடரும்..விக்ராந்த் (இணைச் செயலாளர் : தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர் சங்கம். )










