Sunday, May 31

“சத்தமின்றி முத்தம் தா’’ திரைப்பட விமர்சனம்.

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன்.எஸ் தயாரித்திருக்கும் ஸ்ரீகாந்த் மற்றும் புதுமுக நாயகி பிரியங்கா திம்மேஷ் (சந்தியா) நடிக்க, ராஜ் தேவ் இயக்கத்தில் தயாரான ‘சத்தமின்றி முத்தம் தா’  , ஹரிஷ் பெராடி – இன்ஸ்பெக்டர் எட்வர்ட்,வியான் – ரகு, நிஹாரிகா – ஷீலா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : ஜுபின், பாடல்கள் : விவேகா, ஒளிப்பதிவு : யுவராஜ்.எம், படத்தொகுப்பு – ஜி.மதன், நடனம் : தினேஷ், ஸ்டண்ட் :  மிராக்கிள் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – ஆனந்த், மக்கள் தொடர்பு – மணவை புவன்.

பட ஆரம்பம் பங்களா வீட்டில் வசிக்கும்; சந்தியாவை (பிரியங்கா திம்மேஷ்) மர்ம நபர்கள்  துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க வெளியே  ஒடி வரும் போது எதிரே வரும் காரில் அடிபட்டு கிழே விழுகிறார். சாலையில் விழுந்து கிடக்கும் சந்தியாவை காப்பாற்றி  ஸ்ரீகாந்த் விக்னேஷ்  மருத்துவமனையில் சேர்க்கிறார்.உடனே சந்தியாவுக்கு ஆபரேஷன் செய்ய டாக்டர் கூற நான் தான் சந்தியாவின் கணவர் ரகு என்று கூறி ஆபரேஷனுக்கு செய்ய ஏற்பாடு செய்து விட்டு காத்திருக்கிறார். இந்த விபத்தை பற்றி விசாரிக்க வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் (ஹரிஷ் பெராடி) வருவதை பார்த்து ஸ்ரீகாந்த் (விக்னேஷ்).மருத்துவமனை விட்டு வெளியே சென்று விடுகிறார் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் சந்தியாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.  விபத்தில் தனது நினைவுகளை இழந்த சந்தியா , அவளை அன்பாக கவனித்துக் கொள்ளும் கணவராக ஸ்ரீகாந்த் . (விக்னேஷ்)ஆனால் தன்னுடய  சுண்டுவிரல் கூட  சந்தியா மீது படாமல் பார்த்துக் கொள்கிறார்.  இது ஒருபுறம் இருக்க, நான் தான் அவளது கணவன் என இன்னொருவர் போலீஸில் புகார் தருகிறார்.

போலீஸ் விசாரணை தொடங்க விக்னேஷ் போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளி என தெரியவருகிறது. இது பார்பவர்களை மட்டும் குழப்பாமல், சந்தியாவையும் சேர்த்து போட்டு குழப்புகிறது. உண்மையான கணவன் யார்? சந்தியா வாழ்கையில் என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு ?இப்படம் பதிலளிக்கிறதா படத்தின் மீதி கதை.

ஶ்ரீகாந்த்,   ‘கில்லர் பாயாக’ பணத்திற்க்காக , கொலை செய்யும் கொலைகாரணாக படத்தில்  வந்திருக்கிறார். அவரால் முடிந்த அளவுக்கு முகத்தை இறுக்கமாக வைத்துக் இருக்கிறார் ,பெரும்பாலான காட்சிகளில் அமைதியாக  , ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதே நேரம், ஆக்‌ஷன் காட்சிகளில் ஆக்ரோஷமாக அதிரடியில் இறங்கி அசத்தியுள்ளார் !

நாயகி பிரியங்கா திம்மேஷ் நடிப்பு : தனக்கு கொடுத்த கதாபாத்ரத்தை இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம்?

ஹரிஷ் பெராடி இந்த படத்தில் வருவார் விசாரணை செய்வார் போய்டுவார் அதிகம்  பேசும் அளவுக்கு அவரது நடிப்பு பற்றி நம்மைப் பேச வைக்கவில்லை.

பிரியங்காவின் கணவராக வரும் வியான், வில்லத்தனத்துக்கு சரியான பொருத்தமாக இல்லை இன்னும் நடிப்புக்கு பயிற்சி தேவை .

ஷீலா என்ற கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நிஹாரிகா. இளம் ரசிகர்களை கட்டி போடும் அளவுக்கு  கவர்ந்திழுப்பதற்காக கவர்ச்சி அதிகமாக கொடுத்திருகிறார்

ஜுபின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓ.கே ரகம். குறிப்பாக, ‘செம்பரம்பாக்கம் ஏரியளவு” பாடலில் கிக் அதிகம். இவரது பின்னணி இசை படத்திற்கு பலம்.

கதைக்குத் தேவையான  ஒளிவீச்சு ஒளிப்பதிவைக் யுவராஜ் கொடுத்திருக்கிறார் .

இயக்குனர் ராஜ் தேவ்,  கதையில் எந்தக் குறையும் இல்லை. திரைகதையில் கொஞ்சம் கவனம் செலுத்திரு வேண்டும்  உங்கள் முயற்ச்சி பாராட்டுகள்

‘சத்தமின்றி முத்தம் தா’ – பட கதைக்கும் படபெயருக்கும்  பொருத்தவில்லை இருந்தாலும் கடைசில் திடீரென வரும் திருப்பங்களை  பார்த்து அனைவரும் ரசிக்கலாம்!

Related posts: