Monday, July 27

சிவகுமார் நடித்த ‘ கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, விமான விபத்தில் மரணம்

அக்டோபர் 12

சிவகுமார் நடித்த ‘பத்ரகாளி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது குழு மற்றும் குடும்பத்தினருடன் துபாய் சென்றார். கலை நிகழ்ச்சி முடிந்து, 1976 அக்டோபர் 11ம் தேதி பம்பாய் வழியாக சென்னை திரும்பும்போது, திடீரென்று விமானம் தீப்பிடித்து, நிலையத்துக்கு அருகில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா மற்றும் அவரது தாயார், மூன்று தங்கைகள் அம்புலி (19), சீதா (18), நிம்மி (13) ஆகியோர் உள்பட விமானத்தில் பயணம் செய்த 95 பேரும் உயிரிழந்தனர்.

இதனால், ராணி சந்திரா நடிக்கவிருந்த ‘பத்ரகாளி’ படத்தின் மீதி காட்சிகளை, ஓரளவு அவரைப்போன்ற உருவமுள்ள, ‘பட்டிக்காட்டு ராஜா’ என்ற படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து படத்தை முடித்தார், இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். புஷ்பாவின் மகள் மோகனா, கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இன்று ராணி சந்திராவின் 48வது ஆண்டு நினைவு நாள்.

Related posts: